மாறாதது மாறாதது
maaraadhadhu maaraadhadhu
மாறாதது மாறாதது உன் அன்பு மாறாதது மாறாதது மாறாதது உன் அன்பு மாறாதது மறையாதது மறையாதது உன் அருள் மறையாதது நிறைவானது நிறைவானது உன் நினைவே நிறைவானது என் வாழ்வெல்லாம் சுகமானது
1. அன்னையின் கருவில் என்னை நீ தெரிந்தாய் கண்ணின் மணிபோல் கருத்தாய் காத்து வந்தாய் - 2 என் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டாய் உன் பணி செய்யத் தெரிந்து கொண்டாய் வாழ்வு முழுவதுமே அணைத்துக் கொண்டாய் வானின் மழையெனவே வரம் பொழிந்தாய் - உன் அன்பு மாறாதது உன் அருள் மறையாதது
2 . உன் வழி நடக்கையில் ஒளியாய் நீ இருந்தாய் தடுமாறி விழாமல் கரத்தால் பிடித்துக் கொண்டாய் - 2 ஆயனாய் என்னை சுமந்து வந்தாய் - உன் ஆவியின் கரத்தால் ஆட்கொண்டாய் வாழ்வு முழுவதுமே அணைத்துக் கொண்டாய் வானின் மழையெனவே வரம் பொழிந்தாய் - உன் அன்பு மாறாதது உன் அருள் மறையாதது