மாறாத தேவன் நீரே
maaraadha devan neerae
மாறாத தேவன் நீரே மறவாத தேவன் நீரே-2 நான் உன்னை விட்டு விலகேன் என்றீர் நீர் என்னை தாங்கிடுவீர்-2
உம்மையே நான் என்றும் ஆராதிப்பேன் உம்மையே நான் நேசிப்பேன்-2
1.கூப்பிடும் போது செவிகொடுத்தீரே பயங்களை எல்லாம் நீக்கினீரே-2 (இயேசுவே) நம்பினோரை நீர் கைவிடா தேவன் நீர் என்னை காத்திடுவீர்-2-உம்மையே
2.சுகமற்ற வேளையில் சுகம் தந்தீரே பெலனற்ற வேளையில் பெலனானீரே-2 என் கிருபை உனக்கு போதும் என்றீரே நீர் என்னை நடத்திடுவீர்-2-உம்மையே
3.துணையற்ற நேரத்தில் துணையானீரே சோர்ந்திட்ட நேரத்தில் ஆறுதலானீரே-2 பிரசன்னத்தால் என்னை சூழ்ந்துகொண்டீரே நீர் என்னை அணைத்துக்கொள்வீர்-2
உம்மையே நான் என்றும் பற்றிக்கொள்வேன் உம்மையே நான் பின்பற்றுவேன்-4