மானில ஜோதியிவர் கிறிஸ்தேசுவே
maanila jodhiyivar kiristhesuvae
மானில ஜோதியிவர் கிறிஸ்தேசுவே மனுக் குலத்தின் விளக்கே - இந்த
மங்கிடாதீபமே மறைபொருள் ஞானமே எங்கும் நிறைந்திடும் என தரும் செல்வமே மன இருள் நீக்கிடும் மகிமை நிறைந்திடும் எனதகம் தங்கிடும் கருணைவேந்தர்
பாவமில்லாதூய பரிசுத்த வாழ்வே தேவ குமாரனே அருளின ஈவே குருசினில் தொங்கிடும் கிறிஸ்துவை தேடுவோம் குறைகள் அகன்றிடும் பாக்யமிதே
ஆயிரம் ஆயிரம் துதிகளை ஏற்பார் அன்பர்களின் ஜெப வேண்டுதல் கேட்பார் கவலைகள் தீர்ந்திடும் கண்ணீர் துடைத்திடும் கிருபைகள் ஈந்திடும் பரமபிதாவே