மாமிசமானோர் யாவரின் மேலும்
maamisamaanor yaavarin melum
மாமிசமானோர் யாவரின் மேலும் வந்திடும் ஆவியே - எந்தனின் மேலும வல்லமையாக பொழிந்திட வேண்டுமே
எந்தனின் பெலமெல்லாம் ஒன்றுமில்லை என்பதை நானறிவேன் - உந்தனின் ஆவியினால் எல்லாமாகும் உன்னத தேவனே உயிர்மீட்சி தாரும் சபைதனின் நடுவே அருள்மாரி பொழிந்திடுமே பின்மாரி ஊற்றிடுமே
பெந்தேகொஸ்தே நாளதில் அன்று பலமாய் இறங்கினீரே - உந்தனின் ஜனங்கள்ளங்களின்மீது நிழலிட வேண்டுமே ஆவியின் வரங்கள் அளவில்லாமலே அருளிட வேண்டுமே அபிஷேகம் தாருமே
இந்த வாலிப நாட்களில் உம்மை வாஞ்சித்து கதறுகிறேன் என்றும் மாறா இயேசுவே உம்மை மண்டிட்டு வேண்டுகிறேன் உந்தனுக்காக ஊழியம் செய்ய எந்தனை நிரப்பிடுமே உன்னத பெலத்தாலே