மாலை இன்ப சோலை குயில்களும்
maalai inba solai kuyilgalum
மாலை இன்ப சோலை குயில்களும் சோர்ந்திடும் வேளை இந்த மாலை பாலைவனமோ வாழ்வை புது கிருபையால் தேற்றிட பரன் இயேசு அழைக்கின்றார்
ஓலம் இடும் அலைகள் போல உன் மனமோ தாளங்கள் தவறிய ராகம் உன் நிலையோ பாவங்கள் பாரங்கள் தீர்ப்பவர் இல்லையோ பரலோகபிதா உன்னை பெயர் சொல்லி அழைக்கின்றார்
எண்ணங்கள் போல் உனது வாழ்வமையவில்லையோ பொன்னான உந்தன் காலம் வீணாகி போனதோ கண்மூடி விண்நோக்கி வேண்டுதல் செய்வாயோ கருணாகரன் உன்னை கரம்தாங்க அழைக்கின்றார்