மா தூயனைத் துதித்து
maa thooyanaith thudhithu
மா தூயனைத் துதித்து பாடுவோம் - இங்கும் எங்கும் அருள் நிறைந்திட கிருபை பெருக அன்பரைக் துதிப்போம் - இன்றும் என்றும்
1. இடைவிடாமல் துதிகள் சாற்றிட அன்பாலே நம்மை அணைத்தார். கடைசி நிமிடம் கைவிடார் நம்மையே முடிவு வரை நம்மை நடத்துவார் - மா
2. இயேசுவின் சுபாவம் நம்மில் உருவாக இந்த நேரமே வாழ்த்துவோம் அன்பின் ஆழத்தில் அனுதினம் செல்லுவோம் மண்ணோர்க்கு நல் நிருபமாகுவோம் -மா
3. சுயாதீனமாக சொர்க்கத்தில் ஜீவிப்போம் சுந்தர நாட்டை அடைவோம் ஓயாத சந்தோஷம் ஓர் நாளும் குன்றாத நேயனோ டென்றும் விண்ணில் தங்குவோம் - மா
4. தயாளன் இயேசுவை தினமும் போற்றுவோம் சதா காலமும் சேவிப்போம் நிறைவான தேவனே குறைகள் தீர்ப்பார் கரை திரை இல்லாமல் காப்பாரே - மா