மா பெரிதும் நின்
maa peridhum nin
1. மா பெரிதும் நின் கிருபை சாவரை மறவேனே; மாதாவின் கர்ப்பத்திருந்தே மா தயவாய் என்னையே அழைத்தீரே, மாதவம் நான் செய்தேனோ?
2.அந்தகாரத்தால் நிறைந்து சத்தமின்றி வாழ்ந்தேனே; தந்து உம்மைச் சொந்தமாக என்தனை நீர் மீட்டீரே; நாதா உம்மை என்றும் நான் துதிப்பேனே.
3.நான் நினைத்த பாதை வழி தேன் கசியும் பக்கமே செல்ல எத்தனித்தபோத, அல்லவென்று தடுத்தே ஆட்கொண்டீரே, ஆண்டாண்டும்மைப்போற்றுவேன்.
4.ஊழியத்தை உண்மையுடன் வாழ்நாளெல்லாம் செய்யவும்; நீடும் கிருபைசூடியென்னை வீடு சேரும் வரையும் பலவீனம் தாங்கி தயை செய்வீரே.