மா மகிமை கீர்த்தனம்
maa magimai keerthanam
மா மகிமை கீர்த்தனம் இயேசு மன்னவனை துதிப்போம்
அற்புதமாய் இதுவரையும் அடியாரை நடத்துவதால் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆர்ப்பரித்து ஸ்தோத்திரிப்போம்
கிருபை மிக துதிகளால் பெருக அனுதினமும் பரிசுத்தர் நம் சேர்ந்து ஒன்றாய் கரம் உயர்த்தி வாழ்த்திடுவோம்
சத்துருவின் சதி வினைகள் முற்றிலும் முறியடித்தார் எத்தனை தானிடர் வரும் சத்தியத்தைச் சாற்றிடுவோம்
கிருபை வரமும் சபையினிலே ஜொளித்திடு ஜெபித்திடுவேன் வருகையின் நாள் நெருங்கிடுதே வரங்களினால் நிறைந்திடுவோம்
வசந்த கால சுவிசேஷத்தின் வாசனை வீசிடுதே அயர்ந்திடாது ஆவலுடன் அவர் வரவை நோக்கிடுவோம்