மா மகத்வம் விண்ணிலே
maa magathvam vinnilae
மா மகத்வம் விண்ணிலே மண்ணிலே சமாதானம்
1. விண்ணைத் துறந்து ஆம் மண்ணிலிறங்கியே முன்னனை மீதினிலே தன்னிகரில்லா தேவ சுதனிவர் கன்னிகையிற் பிறந்தார் - மா
2. தாழ்மையின் ரூபமும் ஏழையின் கோலமும் பாழ் நரர்க்காய் எடுத்தே வாழ்விக்க வந்துட்ட மெய்யொளியாயினார் வாழ்த்தி வணங்கிடுவோம் - மா
3. வான் புவி யாவும் படைத்த தேவனே வைக்குமிடம் குடில் வாருமே தாழ்த்தி தாரும் உம் உள்ளத்தை வைக்க இப்பாலகனை - மா
4. மானிடர் மீதவர்க்கேன் இந்த பாசமே மாமிசத்தில் வரவே மண்ணுருவானோரை மாசற்றோராக்கிட மின்னுருவாய் ஜெனித்தார்ஷ- மா
5. இன்னிசை முழங்க இம்மானுவேலனே இந்நிலத்தே துதிப்போம் இரட்சகன் மேல் துதி தோத்திரம் சாற்றியே இன்றென்றும் பாடிடுவோம் - மா