மா மகத்வம் தேவனுக்கு
maa magathvam devanukku
மா மகத்வம் தேவனுக்கு மண்ணிலே சமாதானம் மனுஷர் என்றும் பிரியமா
1. ஆதியுமானவர் அரும்பெரும் தேவனும் மனுவுருவாக வந்தாரே ஆ தி ஜோதியான மாமணி - மா
2. உதித்தாரே பாலனாய் உரைத்த முன் சொல்படி சிறியதோர் பெத்லகேம் ஊரிலே உண்மை வாய்ந்த தேவனானவர் - மா
3. கந்தைத் துணியுமாய் ஆதரவற்றோராய் ஆ குடில் வாடியில் தங்கினார் சொந்தமான யாருமற்றோராய் - மா
4. நல்லதோர் செய்தியாம் பாரினில் யாவர்க்கும் வல்லதோர் மீட்பரே தோன்றினார் எல்லையில்லா நல்ல செய்தியாம் - மா
5. ஜெயஞ் சிறந்தோங்குமே இயேசுவின் நாமத்தில் பேயையும் வென்றாரே வேந்தனார் ஜே ஜே ஜெயம் எங்குமே - மா