மா மகா ராஜனின்
maa magaa raajanin
மா மகா ராஜனின் திவ்விய நகரம் மகிழ்வின் பூரணமே சீயோன் புரம்
1. மாந்தரில் முதற்பலனால் பிதாவுக்காய் மாநிலம் வெறுத்தவாராய் - சுதனுக்காய் மாண்மிகு மீட்பு பெற்ற சீயோனிவரே மகாமேரு மீதினில் ஆளுவார் - மா
2. உருக்க இரக்கங்களால் நிறைந்துள்ள சுரமண்டல இசையாய் - கேட்டிடுதே புவியில் இயேசுவின் பாடுகளில் பங்குற்றோர் நவிந்து கவியே பாடுவார் - மா
3, அண்ணகரே அரண்களாக விளங்கிடும் விண்ணவர் சிகரமிதே - மாணொளியாய் உன்னத தேவனே தன்னுயர் அன்பினிலே வன்னடைக்கலமாய் வாழுவார் - மா.
4. தீவினை புரிந்துரைத்த தீயவரே தீவிரம் திரும்புவாரே - நாணிடவே திவ்வியோர் சீயோனில் தீபமாய் யுகாயுகம் திங்களும் நாணவே சோபிப்பார் - மா.
5. கிறிஸ்து என்னும் மூலை கல்லின் மேல் அப்போஸ்தலர் அஸ்திபாரம் அமைந்த - ஆவியினால் பிதாவின் சிந்தையாய் சீயோனின் சிகரமாய் ஜீவிப்பதால் அவர் சேவிப்பார் - மா