லோகம் ஆளும் ஆண்டவர் ஆணும்
logam aalum aandavar aanum
1. லோகம் ஆளும் ஆண்டவர் ஆணும் பெண்ணும் சிருஷ்டித்தார் இருபேரும் வாழவே ஆசீர்வாதம் தந்தாரே.
2. ஆதலால் விவாகமே மேன்மையுள்ள தாயிற்றே தேவனே இந்நன்மையும் இவருக்கு அளியும்.
3. தேவ வாக்குக் கேற்றதாய் தேவ பக்தியுள்ளோராய் நடக்க வாழ்நாள் முற்றும் கருணை ரூடவ்ந்தருளும்.
4. இந்த இருபேரையும் தேவா அரவணையும் இவரால் புகழ்ச்சியே தேவரீர்க் குண்டாகவே.