லவோதிக்கேயா சபைக்கு தேவஎச்சரிப்பின் தூது
lavodhikkeyaa sabaikku devaeccharippin thoodhu
லவோதிக்கேயா சபைக்கு தேவஎச்சரிப்பின் தூது அனலாயிரு இல்லை குளிராயிரு வெதுவெதுப்பாய் இருந்தால் - உன்னை (2) வாந்தியே பண்ணிடுவார்.
1. ஐஸ்வரியவானாகப் பொன் தருவேன் உடுத்திட வெண் வஸ்திரம் தருவேன் கண்ணுக்குக் கலிக்கம் இட்டுக் கொண்டு ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு.
2. வாசற்படியில் நின்று தட்டுகிறேன் கதவைத் திறந்தால் வந்திடுவேன் போஜனம் பண்ணியே மகிழ்ந்திடுவேன் இப்போதே நீ திற்ந்திடுவாய்.
3. ஆதியும் அந்தமும் ஆனவர் நான் அனைத்து கிரியையும் அறிந்திடுவேன் ஆமென் என்பவர் சொல்லுகிறதை காதுள்ளவனெவனும் கேட்கக்கடவன்.