குயவனே உம் சேவைக்காய்
kuyavanae um sevaikkaay
பல்லவி
குயவனே உம் சேவைக்காய், தருகிறேன் உம் பாதத்தில் வனைந்திடும் உம் சித்தம் போல் உம்மையே ஆராதிக்க-2
1.ஒன்றிற்க்கும் உதவாத பாத்திரமாய் பல முறை உடைக்கப்பட்டேன்-2 குயவன் நீர் புதிதாக வனைந்திட்டதால் உம்மையே சார்ந்து உள்ளேன்-2 உம்மையே சார்ந்து உள்ளேன்..
எல்சடாய் எல்சடாய் சர்வ வல்லவர் நீர் என்மேல் அதிகாரம் உடையவரே.. எல்ரோயி எல்ரோயி என்னைக்காண் பவரே என்னை உமக்காக வனைந்திடுமே.. குயவனே உம் சேவைக்காய்..
2.மறு ரூபமாக்கிடும் தினமும் என்னை, பரிசுத்த உமதாவியால்-2 மகிமைக்கு குறைவின்றி நடந்திடவே உம் பாதம் பிடித்துக்கொண்டேன்-2 உம் பாதம் பிடித்துக்கொண்டேன்..
எல்சடாய் எல்சடாய் சர்வ வல்லவர் நீர் என்மேல் அதிகாரம் உடையவரே.. எல்ரோயி எல்ரோயி என்னைக்காண் பவரே என்னை உமக்காக வனைந்திடுமே..
பல்லவி
குயவனே உம் சேவைக்காய், தருகிறேன் உம் பாதத்தில் வனைந்திடும் உம் சித்தம் போல் உம்மையே ஆராதிக்க-2.