குறுகிப் போவதில்லை பலுகிப்
kurugip povadhillai palugip
குறுகிப் போவதில்லை பலுகிப் பெருகுவேன் சிறுமை அடைவதில்லை மகிமை அடைகிறேன்
நீர் இரக்கம் செய்வதால் கட்டப்படுகிறேன் உம் திருமுன்னே நிலை நாட்டப்படுகிறேன்
மேள வாத்தியத்தோடும் ஆடல்பாடலோடும் ஆனந்த களிப்போடும் புறப்பட செய்தீர் அரமனை போல் என் வாழ்வை கட்டி வருகிறீர்
அழுகையோடு வந்தேன் வேண்டுதல்கள் செய்தேன் ஆறுதல் தந்தீர் - என்னை ஆற்றி தேற்றினீர் இடறாத சமவெளியில் நடத்தி வருகிறீர்
சீயோன் மலை உச்சிக்கு கெம்பீர சத்தத்தோடு நீர் கொடுக்கும் நன்மைக்காக ஓடி வருகிறேன் நீர் பாயும் தோட்டம் போல மாற்றி வருகிறீர் - என்னை
அருமையான மகன் நான் பிரியமான பிள்ளை நான் என்னை நினைத்து உம் உள்ளம் ஏங்குகின்றது எனக்காக உம் இதயம் பொங்குகின்றது