குரல் கொடுப்பேன்
kural koduppen
குரல் கொடுப்பேன் நான் குரல் கொடுப்பேன் குரல் வளம் தந்தவர்க்கு குரல் கொடுப்பேன் கும்பிடுவேன் நான் கும்பிடுவேன் குரலோசை முழங்கியே கும்பிடுவேன்
1. கொன்னை வாயன் எனக்கு வாய் கொடுத்தார் கொடியவன் என்னைச் சேர்த்துக் கொண்டார் பயந்திருந்தேன் என்னைப் பாடச் செய்தார் பணிந்தே நாளும் குரல் கொடுப்பேன் .
2. அனுதின உணவுடன் ஆடை தந்தார் அரக்கனை அழித்திட ஆற்றல் தந்தார் புலன்களை அடக்கிட ஆவி தந்தார் புகழ்ந்து நானும் குரல் கொடுப்பேன்
3. இசையிலும் இனியது மேனா மன்றோ மோனத்தின் விளைவிடம் இயேசு வன்றோ தொழுதிடுவோம் பெரும் ஜாதியன்றோ தொழுதே நாளும் குரல் கொடுப்பேன்