குறைவெல்லாம் நிறைவாகுமே
kuraivellaam niraivaagumae
குறைவெல்லாம் நிறைவாகுமே இயேசுவின் நாமத்தில் கேட்டிடு பெற்றுக்கொள்வாய் இன்றே தந்திடுவார்
1.கண்ணீரைக் காண்கின்றவர் அழுகுரல் கேட்கிறவர் நிறைவானதை தருவார் நிரந்தரமாய் தருவார்
2.உன் துக்க நாட்களெல்லாம் இன்றே முடிந்துபோம் மகிழ்ச்சி உண்டாகிடும் இன்றே நன்றி சொல்வாய்
3.உன்னிடம் உள்ளதை இன்றே ஒப்புவிப்பாய் ஆசீர்வதித்திடுவார் பலுகி பெருகச்செய்வார்