குணப்பட இதுவே தருணமையா
kunappada idhuvae tharunamaiyaa
குணப்பட இதுவே தருணமையா கோபாக்கினை நாள் கொடிதாமே
க்ஷணத்தில் இவ்வுலகமும் அதிலுள்ள பொருள்களும் குணப்பட தசிக்கப்படுமே படுமே படுமே
இன்றைக்கிருக்குமுயிர் நாளைக்கிருக்குமோ யென் றெண்ணியே மனங்கசந்து
ஆஸ்தி கல்வி உத்தியோகம் அதிகரித்தாலகந்தை ஆகி அழிம்பு செய்யாதே
ஆவியுன் கூடுவிட்டேகுமுன் தேவனை அறிந்த வணங்கு மனமே
கனிகொடா மரங்களை விழுத்தும் கோடரி ஐயன் கரத்திலிருக்குதையையோ ஐயையோ