குதூகலம் சந்தோஷமே
kudhoogalam sandhoshamae
குதூகலம் சந்தோஷமே இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2
வானம் எனும் வீதியிலே விண்மீன்கள் பந்தலிட்டு நள்ளிரவில் வந்துதித்த ஒளியே-2 கிழக்கு திசையினிலே குரல் எழுப்பி அறிவித்தது என் இயேசு இரட்சகரின் பிறப்பை-2-(2)
1.மேய்ப்பர் யாவரும் தொழ வந்தனரே நல்ல மேய்ப்பரை.... தூதர் யாவரும் துதிக்க வந்தனர் உன்னத தேவனை....-2 உனக்கும் எனக்கும் நிம்மதி தரும் நம்பிக்கையின் தேவன் குறைகள் இல்லாமல் அன்பு செலுத்தும் நாதன்-2
Happy Christmas Merry Christmas-4
2.மண்ணான உனக்கு தம் சாயலை தந்து ஜீவன் தந்தவரு.... ஜீவன் தர உனக்காய் மண்ணுலகம் வந்த நல்ல நல்ல தேவன்....-2 உன்னை மேன்மேலாய் உயர்த்திய தேவன் வானத்தின் பலகனியை உனக்காய் திறந்தவரு-2
3.மரியின் மைந்தன் பிதா அன்பு குமாரன் நம் இயேசு தேவன்..... ஏழை கோலமாய் மாட்டுத்தொழுவத்தில் நமக்காய் பிறந்தாரு....-2 நானே வழியும் சத்தியம் ஜீவன் என்றாரே அப்பாவை நமக்கு நித்திய ஜீவன் என்றாரே-2