கொட்டுவோம் மேளம் தட்டுவோம்
kottuvom melam thattuvom
கொட்டுவோம் மேளம் தட்டுவோம் தாளம் நம்ம இயேசு சாமி பாரில் வந்து பொறந்தாரு
பொன்னாள் பொறந்தாச்சு நன்னாள் வந்தாச்சு பாலன் ஏசு பாரில் வந்து உதிச்சாச்சு ஆ ஹா ஹா ஹா ஹா ஓஹோ.....
கொட்டுவோம் கொட்டுவோம் மேளம் கொட்டுவோம் தட்டுவோம் தட்டுவோம் தாளம் தட்டுவோம் பாட்டு பாடுவோம் ஆட்டம் ஆடுவோம் -2 இயேசு சாமி பொறந்தாச்சு கொண்டாடுவோம் நம்ம இயேசு சாமி பொறந்தாச்சு கொண்டாடுவோம் - கொட்டுவோம்
1. விண்ணின் மைந்தன் மண்ணில் வந்தார் அதிசயமே மண்ணின் பாவம் போக்க வந்த அதிசயமே ஆலோசனை கர்த்தராம் சமாதான பிரபுவாம் சின்ன இயேசு பாலனை நாம் வாழ்த்தி வணங்குவோம் - கொட்டுவோம்
2. ஏழை உள்ளம் தேடி வந்த அதிசயமே உலகத்தை மீட்க வந்த இயேசு பாலனே பாதையாகவே ஜீவனாகவே சத்தியத்தை சொல்ல வந்த நல்ல சாமியே எங்களுக்கு சத்தியத்தை சொல்ல வந்த நல்ல சாமியே- கொட்டுவோம்