கோர சிலுவை மீதினில்
kora siluvai meedhinil
1. கோர சிலுவை மீதினில் இயேசுவே கொடூர மரணம் ஏற்றீரே கொல்கத்தாவில் இரத்தமும் சொரிந்து கொடுமையும் சகித்தீரல்லோ
கல்வாரி இரத்தத்தினால் - என்னை கழுவி சுத்தம் செய்யும் கறை நீங்கி முற்றிலும் பரிசுத்தமாய் மாற கல்வாரி வந்திட்டேன் நான்
2. மாறா பாவ கறைகள் நீக்க மாசற்ற இரத்தம் சிந்தினீர் மாசற்றோனாய் நானும் முன் நிற்கவே மன்னிப்பைத் தாரும் ஐயா - கல்வாரி
3. ஆவி ஆத்மா சரீரம் முற்றுமாய் ஆதீனமாக ஒப்புவித்தேன் ஆலயம் ஆவியினால் நிரப்பி ஆசீர்வதியுமையா - கல்வாரி
4. தேவ சித்தம் செய்திட தேகத்தில் ஏகமாய் பாடுகள் செகத்தீரே ஜீவன் வைத்து உம் அடி தொடர் ஜீவனால் நிறைப்பீரையா - கல்வாரி
5. ஜீவனும், புதிதும் ஆன மார்க்கம் ஜீவனை ஊற்றியே பிறந்தீரே ஜீவ பலியாய் படைத்த என்னையும் சீயோனில் சேர்ப்பீரையா - கல்வாரி