கூடாரவாசியே நித்தியர்
koodaaravaasiyae nithiyar
கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் நீ ஏன் கலங்குகிறாய்? கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம் நீ ஏன் பதறுகிறாய்?-2
நீ மேலானவைகளைத் தேடு நித்தியர் இயேசுவை நாடு! - 2
1. நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே புயல் வந்தால் சரிந்திடுமே நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை நித்திய வாழ்வில்தானே
2. செல்வம் சுகமோடும் பேர் புகழோடும் சுகித்து நீ வாழ்கிறாயோ? சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள் உன்னையும் சந்திக்குமே