கொல்கொதாவின் குருசினிலே
kolgodhaavin kurusinilae
கொல்கொதாவின் குருசினிலே குருதி வெள்ளம் பாய்ந்திடுதே கள்ளன் என் பாவம் கழுவிடவே - அவர் கால் கரம் மார்பினில் கசிகிறதே
1. ஈடில்லை இணையுமில்லை இயேசு என் நேசரை போல் எவருமில்லை உதிரம் வியர்வையாகி மேனியிலே பெருகுதையா கல்வாரி கொடுமை கண்டு எனது உள்ளம் உருகுதையா ஏனிந்த பாடுகள் எனக்காய்தானோ - கொல்கொதாவின்
2. மகிமையின் தேவன் மனிதர் முன்னே மனங்கசந்து தழுது நின்றார் மா கொடுமை வாரடி வாதையாலே வாடி சிதைந்த மேனியது கல்வாரி பார சிலுவை சுமந்து நடந்த பாதையது ஏனிந்த பாடுகள் உனக்காக தானோ - கொல்கொதாவின்
3. பரம சுகம் தரும் உதிரம் ஊற்றினை பாய்ந்திடுதே சிலுவையிலே காளை வெள்ளாட்டுக் கடா தீர்த்திடாதப் பாவவினை கல்வாரி சிலுவை அன்பு நித்திய லோகம் சேர்க்கும் உன்னை ஏனிந்தப் பாடுகள் நமக்காய்தானோ - கொல்கொதாவின் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)