கொல்கொதா மலையில் குருசினில்
kolgodhaa malaiyil kurusinil
கொல்கொதா மலையில் குருசினில் மாண்ட வல்லபனேசுவே உயர் நாமம் பொல்லார் கலங்க வல்லானுரைப்படி சீலமாய் உயிர்த்த ஜெய நாமம் - 2
நானே பரிகாரி என்று வாக்களித்தீர் நாதா சிந்தினீர் திரு இரத்தம் - 2 சாரும் பாவிக்கு அடைக்கல மளிக்கும் நாதன் துணையலால் வேறுண்டோ - 2
பாடையை தொட்டு பீடையை நீத்த பரிசுத்த ராஜனின் வன்கரமே - 2 வாடும் பாவிகள் வருந்தும் பிணியை நாடியே அகற்றிடும் திருக்கரமே - 2
மாய உலகம் மகிமையுமாக மாயும் நிழல் போல் மாய்ந்திடுமே - 2 மாயமில்லே சிலுவையின் அன்பை மனமே தினமும் மறக்கலாமோ - 2
வானோர் வணங்கும் வானில் ஜோதி - 2 ஈனவர் கோலமும் பூண்டனர் ஏன் தான் ராஜா இந்த கோலம் ஏழையை மீட்கவும் கொண்டல்லோ - 2
இன்னும் அகற்றி நன்மை பயக்கும் கர்த்தராம் ஏசுவே தினம் சரணம் - 2 மரணம் வரையும் சரணம் புகுந்தேன் கருணையின் தேவா துணையருள்வாய் - 2
பாவியை மீட்க தாவியே வந்த பரலோக நாதனின் திருவடியில் - 2 எண்ணிலா நன்மைகள் நிதமும் பொழியும் - 2 புண்ணியனே புகழ் துதிநாமம் 2