கொல்கொதா மலையில்
kolgodhaa malaiyil
1. கொல்கொதா மலையில் விலையேறப் பெற்ற குருதியும் இயேசு பனக்காய் - சொரிந்தே கருணையின் தேவன் மரணமும் ருசித்தார் உருகியே நினைந்துன்னையே
அலையாதே வா மலையாதே வா நிலையான கன்மலை இயேசுவண்டை
2. கானல் நீர் தேடும் மானைப் போல் நீயும் நாணாது இன்பங்களில் அசையும் நாணல் போல வீணாய் அலைவாயோ உந்தன் வானாளும் வீணாகுது - அலை
3. வியாதியினாலே தேகம் வருந்தி வாடுவதேனியும் - நானுன் பரிகாரியான கர்த்தர் என்றாரே வைத்தியமும் ஒளஷதமே - அலை
4. திரு இரத்தத்தால் பரிசுத்தனாக்க திறந்தாரே ஊற்றுனக்காய் - பரிந்து உயிர் நீங்கும் மைந்தன் துயர் கொள்ளும் காட்சி உருகாதோ உன் உள்ளமே - அலை
5. அபிஷேகத்தாலே முறிப்பார் உன் தோள் அடிமை நுகந்தனையே - அவரில் காணவே புதிய ஜீவன் வழியே கனிவாய் அழைக்கிறாரே - அலை
6. இணையில்லா நேசர் அனைத்து இவ்வேளை இளைப்பாறுதல் அளிப்பார் - வருவாய் இத்தரை மீதில் ஜெயமான வாழ்வை இத்தருணம் தருவார் - அலை