கொடும் பாவங்கள் மன்னித்தவர்
kodum paavangal mannithavar
1. கொடும் பாவங்கள் மன்னித்தவர் குறைகள் நீக்க வல்லவரல்லோ? மரணத்தினின் றெடுத்தவர் மனசஞ்சலம் நீக்கிடாரோ?
நம்புவேன் தருவார் இன்றே மட்டெம்மைக் காத்தாரல்லோ? நம்புவேன் தருவார் ரத்தத்தால் எமை மீட்டாரல்லோ?
2. குமாரனைத் தந்தென்னை மீட்டார் "கொடுப்பேன் கேள் என் நாமத்தாலே வேண்டும் நன்மை யாவும்" என்றனர் தூண்டும் ஆவியால் செப்பினாரே.
3. என் பிதா எந்தன் தேவை எல்லாம் யேசுவின் மூலம் ரூடவ்ந்திடுவார் துன்பம் கஷ்டம் கவலையெல்லாம் அன்புடன் அவர் நீக்கிடுவார்.
4. ஆத்துமா தேகம் ஆவியோடும் ஆளும் கர்த்தரைப் போற்றுவோமே பிதா சுதன் ஆவியானோர்க்கும் பிரிய தோத்திரம் என்றுமே