கொடும் கொல்கோதாவின் கொடு முடியில்
kodum kolgodhaavin kodu mudiyil
கொடும் கொல்கோதாவின் கொடு முடியில் கடும் காயப்பட்ட நேசரைக் கண்டேன் ஆஹா பாரத்தால் நான் பணிந்து நின்றேன் மகனே இது உனக்காய் என்றார்
ஆஹா இன்பம் இன்பம் இன்பம் இனி துன்பமொன்றுமில்லை எந்தன் மகா இன்ப ராஜன் இயேசு வரும் நாள்தனிலே
இனி நான் என்னச் செய்ய என்றேன் கனி தா என்று கனிவாய் சொன்னார் இனி தாமதமோ நாதா என்றேன் தொனி கேட்கும் காலம் சமீபம் என்றார
அங்கி வெள்ளையாக நிற்கும் ஜனம் தங்கித் தாபரிக்கும் காட்சி கண்டேன் – இந்த சேனையெல்லாம் எங்கிருந்தென்றேன் வந்த உபத்திரவத்தில் நிலைத்தோர் என்றார்
துதி பாடிடும் தூதர் கணம் துயர் நீங்கும் பின் மறுகணம் துங்கன் இயேசுவின் தூய பிரசன்னம் தங்க மாளிகையில் எங்கும் ஜொலிக்கும்
நல் நேசருக்காய் கொடி பிடிப்பேன் கல்வாரி அன்பை விளம்பிடுவேன் நொடி நேரமதில் என்னைச் சந்திப்பார் முடி சூடி என்றும் ஆளுகை செய்வேன்.
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Em
D Bm
G C
G D G
G
Am
D
D C G
G Em
D Bm
G C
G D G
G Em
D Bm
G C
G D G
G Em
D Bm
G C
G D G
G Em
D Bm
G C
G D G