கொடு உனக்கு கொடுக்கப்படும்
kodu unakku kodukkappadum
கொடு உனக்கு கொடுக்கப்படும் அள உனக்கு அளக்கப்படும் அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படிக்கு அதனின் பலனை அடைந்திடுவாய்
விதவைகொடுத்ததை அறியாயோ ஏழை இரண்டு காசு இரண்டு காசு உள்ளதையெல்லாம் கொடுத்தாளே அவள் அதுபோல நீயும் கொடு உனக்கும்
சிறுவன் கொடுத்ததை அறியாயோ ஏழை ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் இருந்ததையெல்லாம் கொடுத்தானே அவன் அது போல் நீயும் கொடு உனக்கும்
மரியாள் கொடுத்ததை அறியாயோ அந்த வெள்ளைக்கல் பரணியில் பரிமள தைலம் இயன்றதையெல்லாம் கொடுத்தாளே அது போல் நீயும் கொடு உனக்கும்