கோடி கோடியாய் கொடுத்தாலும்
kodi kodiyaay koduthaalum
கோடி கோடியாய் கொடுத்தாலும் உம்மைப் போல் யாரும் கிடைப்பதில்லை என்னைத் தேடி வந்த அன்பிலும் சிறந்த பரிசு எதுவுமில்லை
இயேசுவே அன்பின் சிகரமே இயேசுவே பாசத் தென்றலே இயேசுவே நேசக் காற்றே இயேசுவே கருணைக் கடலே
1.உம் அன்பை விட்டு தூரம் சென்றேன் உம்மை முற்றிலும் மறந்து போனேன் நிலை தெரியாமல் கதறி அழுதேன் மீண்டும் மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
2.விலை கொடுத்து என்னை வாங்கிக் கொண்டீர் நீர் கொடுத்த விலைக்கு நிகரே இல்லை விலையேறப் பெற்ற இரத்ததாள் விலை மதிப்பில்லா வாழ்வு தந்தீர்