கோடி கோடி ஸ்தோத்திரமே
kodi kodi sthothiramae
கோடி கோடி ஸ்தோத்திரமே கோடா கோடா என் இயேசுவுக்கே
ஆயிரம் பேரிலும் சிறந்தவரே ஆத்தும நேசர் என் இயேசுவே அல்லும் பகலும் பாடுவேனே ஆயுள் முழுவதும் உம் நாமமே
வாழ்வில் இருந்து தூக்கினீரே தாவீதை போல் பாடிடுவேன் தாங்கி என்னை நடத்தினீரே தற்பரனே துதி பாடிடுவேன்
மண்ணான எந்தனை தேடி வந்தீர் மன்னவா உம் செயல் அதிசயமே மகிமையில் உம்மோடு வாழ்ந்திடவே மாறாத வாக்குகள் தந்ததினால்
பகலில் பறக்கும் அம்புகட்கும் பாழும் கொள்ளை நோய்களுக்கும் பறந்து காக்கும் பட்சி நீரே பாடிடுவேன் துதி அல்லேலூயா