கோடான கோடிக்கணக்கான மாந்தர்
kodaana kodikkanakkaana maandhar
1. கோடான கோடிக்கணக்கான மாந்தர் ஞானமில்லாமல் மாண்டடு போவாரே. யார் கூறுவார்? மெய்ஞானமற்ற நெஞ்சர் யேசுவினாலுண்டான மீட்பையே.
பல்லவி
ராஜாதி ராஜன் அவரே! (2) சுவிசேஷங் கூற எங்கும் விரைந்தோடிச் சந்தோஷமாய்ச் சொல்லுவோமே.
2. பூலோக வாசல் திறவுண்ட தெங்கும் தடைகள் யாவும் நீங்கலாயிற்றே. தீவிரிப்போம் ஒரே தீர்மானத்தோடும் பாவ விநாசம் கூறி காட்டவே.
பல்லவி
ராஜாதி ராஜன் அவரே! (2) சுவிசேஷங் கூற எங்கும் விரைந்தோடிச் சந்தோஷமாய்ச் சொல்லுவோமே.
3. ஏன் சாகுவீர்? என்றேசு கேட்கிறாரே ஏன் சாகுவீர் என்றிசைந் துரைப்போம். மன்னுயிர்க்காக ஜீவன் துறந்தாரே சுப விசேஷம் எங்கும் கூறுவொம்.
பல்லவி
ராஜாதி ராஜன் அவரே! (2) சுவிசேஷங் கூற எங்கும் விரைந்தோடிச் சந்தோஷமாய்ச் சொல்லுவோமே.
4. தேவாவியால் எத்தேச ஜாதியாரும் யேசுவின் பாதம் பணிவார்களாம். கருணையுற்ற கூட்டத்தா ரெல்லாரும் ஒப்பற்ற நாமம் பாடுவார்களாம்.
பல்லவி
ராஜாதி ராஜன் அவரே! (2) சுவிசேஷங் கூற எங்கும் விரைந்தோடிச் சந்தோஷமாய்ச் சொல்லுவோமே.