கோடா கோடி நன்றி பாடுவேன்
kodaa kodi nandri paaduven
கோடி கோடி நன்றி பாடுவேன் துதிகள் சொல்லி நான் பாடுவேன்
எப்படிப் பாடுவேன் என்ன சொல்லிப் பாடுவேன் எனக்குள்ளே வாழும் என் இயேசுவை எண்ணில்லா நன்மைகள் எனக்காய் செய்திட்டடார் என்றென்றும் நான் பாடுவேன்
நினைவுகள் அறிந்த நித்திய தேவன் நிம்மதி தந்தார் என் வாழ்வில் உணர்வுகள் புரிந்த உயிருள்ள தேவன் உதவிகள் செய்தார் உடனிருந்து நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்க்கும் - 2 அதிகமாய் செய்த அதிசய தேவன் - 2
கண்ணீரைக் கண்ட கருணையின் தேவன் களிகூர்ந்து மகிழ்ந்திட கிருபை செய்தார் கதறலைக் கேட்ட சர்வ வல்ல தேவன் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார் தேவனைப் போல என் இயேசுவைப் போல - 2 வானிலும் பூவிலும் யாருமே இல்லை - 2
தகப்பனைப் போல தாங்கிய தேவன் தாயைப் போல தேற்றி வந்தார் தமையனைப் போல தலைவனைப் போல நல்வழி காட்டி நடத்தி வந்தார் நண்பனைப் போல வைத்தியன் போல - 2 எல்லாமுமானார் என் இயேசு தேவன் - 2