கிருபையினால் இரட்சித்தீரே
kirubaiyinaal iratsitheerae
கிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம் கிருபையை பாடுகிறோம் இயேசய்யா கிருபை கிருபை கிருபை தேவ கிருபை கிருபை கிருபை கிருபை தேவ கிருபை
1. பாவியான என்னை மீட்ட கிருபை பரமன் என்னைப் பாடவைத்த கிருபை – 2
2. தாழ்விலிருந்து தூக்கியெடுத்த கிருபை தயவுடனே அணைத்துக்கொண்ட கிருபை – 2
3. ஒன்றுமில்லா என்னை நினைத்த கிருபை உருவாக்கி உயர்த்தின கிருபை – 2
4. தகுதியில்லா என்னை நேசித்த கிருபை தகுதியான ஊழியம் தந்த கிருபை – 2
5. நான் நிற்பதும் நடப்பதும் உம் கிருபை நான் நிர்மூலமாகாதிருப்பதும் கிருபை – 2