கிருபையின் பூரணராம்
kirubaiyin pooranaraam
1. கிருபையின் பூரணராம் இயேசுவே கிருபையால் என்னை அழைத்தவரே பகர்ந்து உந்தன் மாறிடா கிருபையை என்னிலே பரிவுடன் நிதமும் காத்தனீரே
எந்தன் இயேசுவே நீர் என்றும் நல்லவர் உந்தன் கிருபை நிதம் புதிதென்னிலே என் கிருபை போதும் உனக்கு என்றுரைத்தீரே உம் கிருபையே அது எந்தன் வாஞ்சை
2. கனலெரி சோதனையால் தி யங்கி கலங்கியே அகமது சேர்ந்த வேளை சகாயமே கும் நல் கிருபையை அளிக்கும் கிருபாசனமாய் நீர் தோன்றினீரே - எந்தன்
3. நோயால் மிக தேக வருந்துகையில் நேயனே உன் திருக்கரம் நீட்டி நானுந்தன் பரிகாரி - யென மொழிந்துமே உம் ஜீவன் பெலன் ஈந்திட்டீரே - எந்தன்
4. அளவில்லா அபிஷேகம் பகர்ந்தென்னிலே புதியதோர் சிருஷ்டியாக மாற்றினீர் மாறா நல் உபதேசம் ஈவாய் அளித்தீரே தேறியோனாய் யானும் மாறிடவே - எந்தன்
5. கறையற்ற மணவாட்டி சபை யாது விரைந்துமே சேர்த்திட மணவாளன் வரும் வேளை தரிசிக்க உம் திருமுகமே தருவீர் உம் கிருபையை கனிவுடனே - எந்தன்