கிருபையின் காலம் கடந்து போகுதே
kirubaiyin kaalam kadandhu pogudhae
கிருபையின் காலம் கடந்து போகுதே நெருங்கிச் சேர நீ வா - வீண் பெருமையை மறந்து கருணை தேவனை விரைந்து சேர வா வா
1. தேவன் இல்லையென்று - தினம் வீணாய் கர்வம் கொண்டு தேடி அழைக்கும் அன்பை - நிதம் நாடிச் சேர நகைத்தாய் தேவையும் ஒன்றே தினம் அவர் பாதம் தேடிச் சேர வருவாய்
2. உலகோர் ஞானமனைத்தும் உனக்கு உதவ ஓடி வருவாய் உலகம் முழுதும் உனதாய் உரிதாக்கினாலும் குறைதான் கலந்திடும் ஜீவன் கன நஷ்டமடைந்தால் இலாபம் இல்லை வா வா
3. கல்வி பெரும் செல்வம் - அவை எல்லாம் உன்னைத் தள்ளும் கல்லும் மண்ணும் உன்னை அது சொல்லும் சாட்சி ஒரு நாள் காரண கர்த்தன் பூரண ரூபன் கனிவாய் அழைக்க வருவாய்