கிருபையில்லாமல் என்னிலே
kirubaiyillaamal ennilae
கிருபையில்லாமல் என்னிலே ஒன்றுமில்லை நாதா கிருபையில்லாமல் என்னிலே ஒன்றுமில்லை தேவா
1. தாழ்மையில் இருந்த என்னை நினைத்தது கிருபை தயவுடன் அனுதினமும் நடத்தி செல்லும் கிருபை
2. பாவத்தில் இருந்த என்னை பார்த்தது கிருபை பரிசுத்தமாக்குமே பாடவைத்தும் கிருபை
3. சேற்றில் இருந்து என்னை தூக்கினது கிருபை கன்மலை மேல் நிறுத்ததும் கிருபை
4. பெலவீன நேரத்திலே பெலன் தந்த கிருபை சுகவீன நேரத்தில் சுகம் தந்த கிருபை
5. பயப்படும் நேரத்திலே பாதுகாக்கும் கிருபை தடுமாறும் நேரத்தில் தாங்கி நடத்தும் கிருபை
6. கஷ்டப்பட்ட நேரத்திலே கரம் தந்த கிருபை நஷ்டப்பட்ட நேரத்தில் உதவி செய்த கிருபை