கிருபையிலே என்னை மீட்டவரே
kirubaiyilae ennai meettavarae
கிருபையிலே என்னை மீட்டவரே மறவாமல் உமக்கு நன்றி சொல்வேன் தயவால் என்னை தாங்கினீரே மனதாற உமக்கு நன்றி சொல்வேன்
நன்றி, நன்றி, நன்றி இயேசுவே நன்றி, நன்றி, நன்றி ராஜனே (2)
1. வாதைகள் என்னை மேற்கொண்ட போதிலும் தளும்புகளால் என்னை சுகமாக்கினீரே பரிகாரியே எந்தன் இயேசுவே வியாதிகள் ஒன்றும் எனக்கில்லையே
2. தனிமையின் பாதையில் தவித்திட நேரத்தில் துணையாய் வந்து தேற்றினீரே துணையாளரே எந்தன் இயேசுவே ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லையே
3. இருளின் பாதையில் கலங்கின வேளையில் (நேரத்தில்) வார்த்தையால் என்னை தேற்றினீரே ஒளியானீரே எந்தன் வாழ்விலே (இனி) இருளிலே என்றும் (நான்) நடப்பதில்லையே