கிருபையை வேண்டுகிறோம்
kirubaiyai vendugirom
கிருபையை வேண்டுகிறோம் - உமது கிருபையை நாடுகிறோம் அல்லேலூயா - ஓசன்னா அல்லேலூயா - ஓசன்னா -2
1. ஒவ்வொரு நாளும் வேண்டும் கிருபை ஒவ்வொரு நேரமும் வேண்டும் கிருபை கிருபை இல்லையென்றால் நானுமிங்கில்லை எனக்குத் தாரும் அளவில்லா கிருபை
2. கடந்த நாட்களில் காத்திட்ட கிருபை வரும் நாட்களில் காக்கும் கிருபை எந்நாளும் வேண்டும் தேவ கிருபையே எப்போதும் தாங்கும் தேவ கிருபை
3. ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் கிருபை புதிய ஆண்டில் தினம் புது கிருபை சத்தியம் அருளின தேவ கிருபையே சபையின் நடுவில் விளங்கும் கிருபை