கிருபையே தேவ கிருபையே
kirubaiyae deva kirubaiyae
கிருபையே தேவ கிருபையே என்னை நடத்தும் கிருபையே
1.நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபையே தேவ கிருபையே வாழ்வதும் பிழைத்திருப்பதும் கிருபையே தேவ கிருபையே
2.தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபையே தேவ கிருபையே தாங்கி ஏந்தி சுமப்பதும் கிருபையே தேவ கிருபையே
3.பாவத்திலிருந்தென்னை மீட்டதும் கிருபையே தேவ கிருபையே பலவீன நேரத்தில் விடுவித்ததும் கிருபையே தேவ கிருபையே
4.எனக்காய் யாவையும் செய்து முடிக்கும் கிருபையே தேவ கிருபையே என் ஜீவனுள்ள நாளெல்லாம் என்னைத் தொடரும் கிருபையே
5.நித்திய மகிமைக்கு அழைத்ததும் கிருபையே தேவ கிருபையே நித்திய ஜீவனை கொடுப்பதும் கிருபையே தேவ கிருபையே