கிருபைகளை நினைத்து
kirubaigalai ninaithu
கிருபைகளை நினைத்து நினைத்து உம்மை வாழ்த்துகிறேன் - நினைத்து நினைத்து உண்மை போற்றுகிறேன் - (2)
உந்தன் கிருபை பெரியதே உந்தன் கிருபை மேலானதே உந்தன் கிருபை விலகாதே உந்தன் கிருபை மாறாததே - (2)
கடந்த நாளெல்லாம் கூட வந்தீர் கருத்தாய் கனிவாய் நடத்தி வந்தீர் - (2) கண்ணீரை துடைத்தீர் கரத்தை பிடித்தீர் எல்லாம் உந்தன் கிருபை தானே - (2)
எந்தன் விருப்பம் மறக்கச் செய்தீர் உந்தன் விருப்பம் நினைக்கச் செய்தீர் - (2) பெலனை கொடுத்தீர் பெலவான் ஆக்கினீர் எல்லாம் உந்தன் கிருபை தானே- (2)