கிருபை வேண்டும் நாதா
kirubai vendum naadhaa
கிருபை வேண்டும் நாதா - இயேசுவே உம் திவ்விய கிருபை வேண்டும் நாதா - இவ்வாராதனையில்
உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது - கிருபை
ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின - கிருபை
இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின - கிருபை
பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின - கிருபை
பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல் உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்தே - கிருபை
தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும் - கிருபை
வருகிறேன் சீக்கிரம் என்றுரைத்த நேசா தருகிறேன் என்னையே ஆசீர்வதித்திட - கிருபை
அடியாராம் ஏழைகள் உம்மைச் சந்தித்திட முடிவு வரைக்கும் , காத்திடும் கிருபையால் - கிருபை