கிருபை தாருமே கிருபை தாருமே
kirubai thaarumae kirubai thaarumae
கிருபை தாருமே கிருபை தாருமே கிருபை தாருமே உம் கிருபை தாருமே (2) உம்மை பின்செல்ல ஊழியம் செய்ய கிருபை தாருமே (2)
1. அதிகாலையில் உம்மை தேடுவேன் புது கிருபை தாருமே எவ்வேளையும் ஆராதிப்பேன் உம் ஆவியை ஊற்றும் (2)
பெலவீனமான நேரம் உம் கிருபை என்னை தாங்கும் சோர்ந்து போன நேரம் உம் வார்த்தை என்னை தேற்றும் (2)
2. விசுவாசத்தில் போராடிட உம் கிருபை தாருமே போராட்டத்தில் நான் ஜெயித்திட உம் பெலனும் தாருமே (2)
என்னதான் நேரிட்டாலும் என் ஜீவன் போனாலும் நீர் அழைத்த அழைப்பில் நிற்க உம் கிருபை தருமே (2)