கிருபை சத்தியமும் நிறைந்தவர்
kirubai sathiyamum niraindhavar
1. கிருபை சத்தியமும் நிறைந்தவர் - இதோ திரு மகவானார் இயேசுவே இருள் மேவுமுலகின் அலகினை அழிக்க அருள் ஒளியாக பிறந்தார்
வாருமே முன்னனை சேருமே மா தேவ பலனாய் இயேசு நமக்காக பிறந்தார்
2. அனாதயர்க் கபயம் அளிக்கும் இரட்சகரே அநாதியாய்ப் பரம் இருந்தோர் அநாதி சிநேகத்தால் மனுக்குலம் மீட்டிட மனுவேலனாகப் பிறந்தார் - வாருமே
3. தழற்புவியதிலே தம்மையவர் தாழ்த்தியே அழிவுற்றோரை ஈடேற்றிட அழிவில்லா இரட்சகர் ஏழையுருவெடுத்தே அழுது பெத்தலைப் பிறந்தார் - வாருமே
4. தயாபர பிதாவே தரித்திரர் எமக்காய் தயவுடன் தந்த தனமே சிறப்புடன் சீயோனின் அரசனாய் வருவோர் சிறுமையுற்றோராய்ப் பிறந்தார் - வாருமே
5. நிறைந்தபிஷேகத்தால் வருங்கன மகிமை திரு சுதனிவர்க் களிப்போம் பதினாயிரங்களில் எமக்கவர் சிறந்தோர் பதியே நம் மணவாளனே - வாருமே