கிருபை புரிந்தருளும் இந்த
kirubai purindharulum indha
கிருபை புரிந்தருளும் இந்த வேளை திருவடி வெ இரட்சகா ஆ ஆ - கிரு
1. பாதகன் என் பாரில் பாவத்தால் நிறைந்து வெந்தழிந்து போகாது சிந்தினாய் ரத்தம் - கிரு
2. பாவமும் நோய் இல்லாச் சோபனக் கண்ணாளா காயங் கொடுத்தாயே நோயென்னை விட்டேக - கிரு
3. கெத்செமனேப் பாடே அச்சயனின் ஈடே எச்சணமும் சேர வச்சிரக் காதலா - கிரு
4, பாத்திரமற்ற இத்துாசி யானென் செய்வேன் தோத்திரமே செய்வேன் நேத்திரப் பூமானே - கிரு
5. என்ன எந்தன் நீதி சொன்னால் அருவருப்பு எத்தனை ஆனாலும் சித்தம் வைத்தாலும் - கிரு
6. குரு சுத்தம் செய்தால் பரிசுத்த மென்றீர் திருச் சித்தப்படியே பரிசுத்தம் தாரும் - கிரு