கிருபை காலம் ஓடி போகுது
kirubai kaalam odi pogudhu
கிருபை காலம் ஓடி போகுது நரர் கிருபை பெற்றிட ஓடி வரும் நீர் விரைவாய்
1. பகல் சென்று போயிற்று இரவு வந்து கிட்டிற்று சொந்தமாக இயேசுவைச் சந்தோஷமாய் சேர்ந்திட - கிருபை
2. லோக நேசம் வெறுத்துப் பாவ ஆசை அறுத்துப் பாவ மன்னிப்படைந்து ஜீவ வழி சேர்ந்திட - கிருபை
3. சொந்தக் கிரியை முன்னே அந்தகாரம் பின்னே அந்த வழி செல்வாயோ உன் அந்தம் அக்கினிக்கடலில் - கிருபை
4. நாள் உன் நாளாகும் மரிக்கும் வேளை தெரியுமா நாதர் இயேசு வேகம் வாறார் வேளை தெரியாததாகையால்-கிருபை
5, அந்திக் கிறிஸ்து வந்திட மானிடரை சேர்த்திட தேவ சிநேகம் குறைந்துபோகும் பாவம் ஏராளமம் - கிருபை
6. கபட பக்தி தள்ளியே காட்டு வாய் அடைத்து மே ஆக்கினை அடையுமுன் தண்டனைக்கு தப்பவே - கிருபை
7. எந்த தூது கேட்டுப் மாறிடாத மானிடர் ஏழை என்னை இரட்சியும் என்று கெஞ்சிக் கேட்கவே - கிருபை
8. நோவு துன்பம் மரணம் வேறு எந்தக் கஷ்டமோ நெருங்கி உன்னைச் சேரும் இயேசுவண்டை ஓடிவா - கிருபை
9, கர்த்தர் உன்னை தள்ளுமுன் நரகத்தை நீ சேருமுன் தேவ கிருபை பெற்றிட இயேசுவின் பாதம் சேர - கிருபை
10. ஆதி அன்பு குளிர்ந்து அலைந்தலைந்து ஜீவிக்கும் மானிடரைப் பாராமல் இயேசுவை நீ பார்த்துவா - கிருபை