கிருபாகரனே இயேசு நாதா
kirubaagaranae yesu naadhaa
கிருபாகரனே இயேசு நாதா நீர் நல்லவர் வல்லவர் கேட்கின்றவர் எங்கள் ஜெபத்தை கேட்டு தேசத்தை மாற்றிடுமே (2 இந்திய தேசத்து ஜனங்களெல்லாம் இயேசுவை நோக்கி வர வேண்டுமே தெய்வத்தை தேடுகின்ற ஏழை ஜனங்கள் மீட்டிடுமே (2
இந்திய தேசத்து சபைகள் எல்லாம் ஒரு மனதோடு ஜெபிக்கணுமே எழுப்புதல் அடையணுமே தேசத்தில் பின் மாரி ஊற்றணுமே (2
இந்திய தேசத்தின் இளைஞர் எல்லாம் இயேசுவுக்காக எழும்பணுமே சுவிசேஷம் சொல்லனுமே அற்புத அடையாளம் நடக்கனுமே(2)