கிருபாதார பலி யாமே திருக்குமரன்
kirubaadhaara pali yaamae thirukkumaran
கிருபாதார பலி யாமே திருக்குமரன் கிறிஸ்தேசு தாமே,
1. பிதாவானவர் அன்பைச் சிந்திப்பாயா, ஒரே பேரானோரை தந்தனர். பிழைத்திடவே இந்த மனுக்குலமே பரண் நோக்கத்தை நிறைவேற்றினார்.
2. இலவசமாக தேவ கிருபையினால் இயேசுவில் உள்ள மீட்பு பெற்றிடவே, தேவ குமாரனைப் பலியாக்கினதால் தேல் அன்பினை வெளிப்படுத்தினார்,
3. சிரசில் முள்முடி சூட்டியதால் திருமுகம் குருதியில் நனைந்த துவே கரம் கால்களில் ஆணி பாய்ந்ததால் இரத்த சாட்சியாய் இயேசு தொங்கினார்.
4. சர்வலோக பாவ நிவாரண மாகத் தேவகுமாரன் இயேசு பலியானார் காயங்களில் ஓடும் இரத்தத்தினாலே தூய்மையான ஜீவியம் பெற்றிடலாமே.
5. ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து தம்மைப் பிதாவிடத்தில் பழுதற்ற பலி யாக ஒப்புவித்தல் பூரண சுத்தனாக்கவே சித்தம் கொண்டாரே
6. புது உடன்படிக்கையின் மத்தியஸ்த ராய் புது சிருஷ்டியில் எம்மை உருவாக்கிய அழியாமை ஜீவன் அளித்ததினால் அழிவில்லாச் சுதந்திரம் அடைந்திடுவேன்