கிருபா பூரணமே
kirubaa pooranamae
கிருபா பூரணமே! திரியேகாம்பரமே! தனிமுதல் இறைவா! தேன் நிறை மலரே தினம் தினம் ஸ்தோத்திரமே - ஆ - ஆ
1. வருத்தத்தால் சுமந்த பாரமெல்லாம் அகற்றி கருத்தாய் நினைத்தீர் கரத்தினில் வரைந்தீர் கருணா சமுத்திரமே - ஆ - ஆ கரை புரண்டோடும் கனிரசம் நேசம் அளவிட முடியாத - ஆ - ஆ - கிருபா
2. மலர்ந்த முகத்துடன் நான் அனந்த நாளும் பாட நிந்தை உமிழ்நீர் தாங்கினீர் முகத்தில் பஞ்சை எந்தனுக்காய் - ஆ - ஆ உன்னத அடைக்கலத்தில் என்னை வைத்தீர் மகிழ்ந்து ஸ்தோத்திரிப்பேன் - ஆ - ஆ - கிருபா
3. பாட இயலாது தேடும் பொருள் உந்தன் அனுதின சகாயம் ஆச்சரிய விடுதலை அந்தந்தச் சமயங்களில் - ஆ - ஆ ஆர்ப்பரிப்புடன் ஸ்தோத்தரிப்பேனே அதிசயம் அதிசயமே - ஆ - ஆ - கிருபா
4. வனாந்தரத்தில் உம்மைப் பின்பற்றின நேசம் நினைத்தீர் எந்தன் துரோகம் மறந்தீர் ஆதரவுடன் அழைத்தீர் - ஆ - ஆ தாரகமே உந்தன் பூரணம் தருவீர் மேகமதில் உயர் - ஆ - ஆ - கிருபா
5. எக்காளம் தொனிக்க தேகமும் மீட்புறவே தவித்த பரிசுத்தர்கள் மனங்களிக்க சேர்த்திட வருவீரே - ஆ - ஆ இயேசு மணவாள ராஜனும் முடனே என்றென்றும் வாழ்ந்திடுவேன் - ஆ - ஆ - கிருபா