கிறிஸ்துவுக்காய் பிரகாசிப்போம்
kiristhuvukkaay piragaasippom
கிறிஸ்துவுக்காய் பிரகாசிப்போம் எழுப்புதலை நாம் காண்போம் காற்றடித்தாலும் புயல் வந்தாலும் தடை வந்தாலும் பிரகாசிப்போம்
இது எழுப்புதலின் காலம் நாம் செயல்படும் நேரம்
சிற்றின்ப சேற்றில் கிடந்தது போதும் சீறி எழுவோம் பிரகாசிக்க கடைசி காலம் இதுதான் என்று உணர்ந்து எழும்புவோம் பிரகாசிக்க
நமக்காய் வாழ்ந்து சுகித்தது போதும் அவர்க்காய் எழும்புவோம் பிரகாசிக்க தடைகள் தகர்ப்போம் பட்டயம் எடுப்போம் படைபோல் எழும்புவோம் பிரகாசிக்க
விழுந்து விழுந்து எழுந்தது போதும் வீறு கொள்வோம் பிரகாசிக்க விழித்தெழுவோம் பாரம் கொள்வோம் சுதந்தரிப்போம் பாரதத்தை