கிறிஸ்துவின் போர்வீரரே
kiristhuvin porveerarae
கிறிஸ்துவின் போர்வீரரே யுத்தத்தின் ஜெயவீரரே சேனையின் அதிபர் எழுந்துவிட்டார் சுதந்தரிப்போம் இந்த தேசத்தை
இந்தியா இயேசுவின் சொந்தமாய் மாறுமே
எரிகோவை கண்டு அஞ்சிடோம் எதிரியின் பெலத்தால் கலங்கிடோம் துதியின் ஆயுதம் பிடித்துள்ளோம் தூயரால் கோட்டைகள் தகர்த்திடுவோம்
சத்துருவின் தந்திரம் சிதறிடும் சத்திய கச்சையை கட்டுவோம் அக்கினியாஸ்திரம் அவித்திடும் விசுவாச கேடயம் பிடித்திடுவோம்
இந்தியா இயேசுவை ஏற்கவே இரத்த சாட்சியாய் எழும்புவோம் இறுதி வரை அவர் சேவையில் தியாகமாய் அவர்க்கே உழைத்திடுவோம்